வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 மார்ச், 2010

அவுஸ்திரேலியாவின் விஷேட பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு!


அவுஸ்திரேலியாவின் விஷேட பிரதிநிதியான ஜோன் மெக்ராத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்தவாரம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இச்சந்திப்பின்போது அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சோபியா மக்ன்ரயர் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உதவி உயர் ஸ்தானிகர் ரொமேஸ் ஜெயசிங்க வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.செனிவரட்ண ஆகியோரும் உடனிருந்தனர்.

அவுஸ்திரேலிய பிரதமரின் விஷேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோன் மெக்ராத் அரசாங்கத் தரப்பு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை மற்றுமோர் விடயமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’