வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை அம்பலம்



நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின், சாமியாரின் மேலும பல உல்லாசங்கள் அடங்கிய சிடியை கொடுத்தார். மேலும் சாமியாரால் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும், கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தந்துள்ளார்.

மேலும் தனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளதாக லெனின் கூறியதையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இவரது பெயர் முதலில் பிரேமானந்தா என்று கூறப்பட்டது. ஆனால், தனது பெயர் லெனி்ன் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா என்று போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இவர் சேலம் மாவட்டம ஆத்தூரைச் சேர்ந்தவர் ஆவார். ரஞ்சிதாவுடனான உல்லாசக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதையடுத்து இதை லெனின் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பு கூறியது நினைவுகூறத்தக்கது.

வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:

இந் நிலையி்ல் நித்யானந்தா மீது தமிழகத்தில் தரப்பட்ட புகார்கள், தாக்கலான வழக்குகள் அனைத்தையும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

குற்றங்கள் அனைத்தும் பெங்களூர் ஆசிரமத்தில் தான் நடந்தன என்பதால் அவை அனைத்தும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

நித்யானந்தா மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், நில மோசடி, பண மோசடி, இந்து மத நம்பிக்கையை புண்படுத்தியது என்று பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் அவர் மீது கற்பழிப்பு, கூட்டுச் சதி உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவையே ரஞ்சிதா தான் தனது ஏற்பாட்டில் எடுத்ததாகவும் முதலில் கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்பது லெனினை முழுமையாக விசாரித்தால் தான் தெரியவரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’