வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

பிரபாகரனை ஒழித்துக் கட்டவே அரசுடன் இணைந்தேன் : பந்துல குணவர்தன _

நான் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை. தாய்நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும் என்றே கருதினேன். அதற்கு முதலில் பிரபாகரனை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்போதே அது சாத்தியமாகும். அதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்" என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவையில் சகலரும் அமைதியாக இருந்த போது நான் குரல் கொடுத்தேன், பிரச்சினையை கண்டு முகமூடி அணியவில்லை. பிரச்சினைக்கு முகம்கொடுத்தேன். தேர்தல் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளமைதான் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"யுத்தத்திற்காக 2008 ஆம் ஆண்டில் 470 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டு 250 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரிகள் அதிகரிக்கப்பட்டு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
தற்போது பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு முழுமையாகவே வரி அறவிடப்படுவதில்லை. பருப்பு மற்றும் சீனி போன்ற பொருட்களுக்கு அறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. எனினும் இம்முறை குறைவடைந்துள்ளது. இதுவே எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறையாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சந்தோஷமாக இருந்திருக்கும்.
அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுத்தோமே தவிர அமைச்சுப் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன்.
காஸ் விலை குறைக்கப்பட்டமையினால் நுகர்வோர் மாதத்திற்கு 300 ரூபாவினையும் பெற்றோல் விலை குறைந்தமையினால் 100 லீற்றர் பெற்றோலை பாவிக்கும் ஒருவர் 4200 ரூபாவையும், டீசல் விலை குறைக்கப்பட்டமையினால் 50 லீற்றர் டீசலை பயன்படுத்தும் ஒருவர் 1800 ரூபானையும் மீதப்படுத்த முடிந்துள்ளது" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’