வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

கிறிஸ்மஸ் தீவில் இருந்து தமிழர்களை திருப்பியனுப்ப அவுஸ்திரேலியா தீர்மானம்



அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கை தமிழர்களை இலங்கைக்கே நாடு கடத்தும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் 3 தமிழர்களை கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கிறிஸ்மஸ் தீவில் தொடர்ந்தும் அகதிகளை வைத்திருப்பதன் மூலம்
அவுஸ்திலேயாவுக்குள் சட்டவிரோத குடியேறிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தே அவுஸ்திரேலியா இந்த முடிவை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை மற்றும் ஆப்கான் அகதிகளுக்கான சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டி தொடர்பாக மீள ஆராயப்போவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளமையும் ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரடைந்து வருகின்றமையுமே ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில், தற்போது 1872 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதிகளின் தகவல்படி மேலும் பலர் அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’