வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 மார்ச், 2010

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றிற்கான நீதவான்கள் இன்று நியமனம்

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றிற்கான நீதவான்கள் இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த இராணுவ நீதிமன்றிற்கான நீதவான் நியமனங்கள் இடம்பெறவுள்ளது
.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் அவற்றை விசாரணை செய்ய ஒரே நீதவான் குழாம் நியமிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரண்டு இராணுவ நீதிமன்றங்களும் ஒரே நீதவான் குழாமின் கீழ் விசாரணை செய்ய முடியாதென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை அடுத்து வெவ்வேறு நீதவான் குழாம்களைக் கொண்டு விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’