
சென்னை : நானோ, தியான பீடமோ சட்டரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிரான உண்மைகளை சேகரித்து விரைவில் வருவேன், என, நித்யானந்தன் கூறியுள்ளார். எங்கோ மறைவிடத்தில் ஒளிந்திருக்கும் அவர் இதனை ஒரு வீடியோ சிடி பேட்டியாக தந்துள்ளார்.
நேற்று பிற்பகல் நித்யானந்தரின் வக்கீல் ஸ்ரீதர் இதனை பத்திரிகையாளர்களுக்கு அளித்தார்.
அந்த சிடியில் நித்யானந்தன் கூறியிருப்பது: என் மீதும், தியான பீடம் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் என் மீது கொண்ட அன்பினால் கடிதம், இ-மெயில் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
என் மீதும், தியான பீடத்தின் மீதும் வதந்தி பரப்பப்படுகிறது. சட்டரீதியாக நானோ, தியானபீடமோ எந்த தவறையும் செய்யவில்லை. குற்றச்சாட்டு மற்றும் வதந்தி, செய்தியின் உண்மையை திரட்ட முயற்சி செய்து வருகிறோம். எல்லா குற்றச்சாட்டுக்கும் விரைவில் விடை அளிப்பேன். சில நாட்கள் மட்டும் பொறுமையாக இருங்கள்..."
இந்த விளக்கத்தை அவர் நேரில் சொல்லாதது ஏன்? சட்டத்தை மதிக்கும் அவர் இப்படி கிரிமினல் போல மறைந்து நின்று சிடி அனுப்பிக்கொண்டிருப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’