
இதன்போது புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளில் சிலவற்றைத் தவிர அனைத்து வீடுகளுமே யுத்தம் காரணமாக உடைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமது வீட்டு வசதியின்மை தொடர்பிலும் இதன்போது அம்மக்கள் புளொட் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் அமைப்பாளர் சிவநேசன் பவன் ஆகியோர், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள், அவர்களின் மீள்குடியேற்றம், போக்குவரத்து கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு இத்தேர்தலின்போது மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’