வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 மார்ச், 2010

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சிறப்பாக ஆடும் : டோனி நம்பிக்கை


சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடும் என்று அதன் தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

தலைவர் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், தேர்வாளர் வி.பி.சந்திர சேகர், குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோனி,


"நடைபெறவிருக்கும் 3ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம். கிண்ணத்தை வெல்ல கடுமையாகப் போராடுவோம். 20 ஓவர் போட்டியைப் பொறுத்தவரை நிச்சயமாக எதையும் சொல்ல முடியாது. 15, 20 நிமிடங்களில் ஆட்டத்தின் தன்மையே மாறிவிடும். எங்கள் அணியில் பந்துவீச்சில் பலவீனம் இல்லை" என்று கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’