வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 மார்ச், 2010

புளொட் தலைவரின் முயற்சியால் சிறுவர் போராளிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை!


புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பின் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அண்மையில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான விசேட குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தது. இதனைத் தொடர்ந்து
பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோரிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் ஒருதொகுதி சிறுவர் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் எதிர்வரும் வாரத்தில் மேலும் 1000சிறுவர் போராளிகளை விடுவித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று புளொட் தலைவரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’