
தமிழீழ விடுதலைப்புலிகளின் சில தலைவர்கள், அகதிகள் என்ற போர்வையில் பிரித்தானியாவில் அடைக்கலம் பெற்றால் அது பிராந்தியத்திற்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என இலங்கையின் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் எச்சரித்துள்ளார்.
பின்கதவால் பிரித்தானியாவுக்குள் அகதிகள் போல் பிரவேசிக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் முயற்சிக்கலாம் என இலங்கையின் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர், எயார் மார்சல் ஜெயலத் வீரக்கொடி குறி;ப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என தாம் நம்பவில்லை என தெரிவித்துள்ள ஜெயக்கொடி, யாராவது இலங்கையில் நசுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் ஊக்குவிக்க முயற்சித்தால் அது, இலங்கையை மாத்திரமல்ல உலக சமாதானத்திற்கும் ஆபத்தைக் கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில், உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டமையும் அதில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரும், பிரதமரும் பங்கேற்றமையும் குறித்தே ஜயலத் வீரக்கொடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம், தெற்காசிய விவகாரங்களில் பிரித்தானியா, தலையிடுவதையே குறிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உலக தமிழ் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் ஆட்சேபனைக்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’