வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 மார்ச், 2010

சரத் மீதான விசாரணைக்குப் புதிய குழு நியமனம் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிப்பு : ஜகத் ஜயசூரிய

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துவதற்குப் புதிய நீதியரசர் குழுவை நியமிப்பது குறித்து ஜனாதிபதிக்குக் கடிதமூலம் அறிவித்திருப்பதாகவும்
ஜனாதிபதியின் பதில் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
பொன்சேகா மீதான இரண்டாவது கட்ட விசாரணையின் போது, தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நீதியரசர் குழு, விசாரணை நடத்துவதற்கு அவரது தரப்பு நேற்று ஆட்சேபனை வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று விசாரணை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது .
இது தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’