மெதுவாக பந்து வீசியதற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலைவர் சங்கக்காரவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டது. இதனால் அந்த அணி மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டுக்கு ஆளானது.
சங்கக்கராவுக்கு தடை
இந்த போட்டி தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மெதுவாக பந்து வீச்சு குற்றச்சாட்டில் சிக்கியது இது 3ஆவது முறையாகும். ஏற்கனவே கடந்த 13ஆம் திகதி நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் சங்கக்கராவுக்கு ரூ.9.10 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. 2-வது முறையாக கடந்த 24ஆம் திகதி நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு கேப்டன் சங்கக்கராவுக்கு ரூ.18 லட்சமும், அணி வீரர்களுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
3ஆவது தடவையாக மெதுவாக பந்து வீச்சு குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து பஞ்சாப் அணி கேப்டன் சங்கக்கராவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வருகிற 30ஆம் திகதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முடியாது. அதோடு சங்கக்கராவுக்கு ரூ. 23 லட்சமும், அணி வீரர்களுக்கு ரூ.9.20 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ,
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’