வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 மார்ச், 2010

இலங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும்- பாலித கொஹன



இலங்கை தனது உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நிர்வாகத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இலங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும் என்பதே இலங்கையின் புலப்பாடாகும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புள்ள விவகாரம் என்ற அடிப்படையில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தேசம் கொண்டிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. பயங்கரவாத அமைப்பு எனப் பரவலாக கருதப்பட்ட பிரிவினை வாதக் குழுவொன் றுக்கு எதிராக நடைபெற்ற யுத்தம் ஒன்றின் முடிவின் பின்னரே இந்த விவகாரம் தலை தூக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற வகையில் இத்தகைய தன்மை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க அதிகாரம் உள்ளது என நான் கருதுகிறேன் என்று பான் கீ மூன் இந்த வார முற்பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நடைமுறை எவ்விதத்திலும் இலங்கை யின் இறையாண்மைக்கு விரோதமானதாக அமையாது எனவும் அவர் சுட்டிக் காட்டி யிருந்தார். ஆனால் 118 உறுப்பு நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பின் ஆதரவுடன் இந்த வாதத்தை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.

அணி சேரா அமைப்பு இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள் ளதுடன் அவர் மீது இரண்டு குற்றச்சாட் டுகளையும் சுமத்தி இருந்தது. ஒன்று ஐக்கிய நாடுகளின் சாசனத்தை மீற எத்தனித்தல் மற்றது உறுப்பு நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங் களில் தலையீடு செய்ய முயல்வது என்ப தாகும்.

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைப் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டர் பாலித கொஹன இது குறித்து கூறுகையில், சம்பந்தப் பட்ட சகல தரப்பினரும் எதிர்பார்ப்பின்படி செயலாளர் நாயகம் ஏற்ற வகையில் நடந்து கொள்வார் என இலங்கை நம்புவதாக தெரி வித்தார். ஐ.பி.எஸ். செய்திச் சேவையின் ஐ.நா. பணியக அதிகாரி தாலிப்டீன் டாக்டர் பாலித கொஹனவைப் பேட்டி கண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் விவரம் வருமாறு, கேள்வி: இலங்கைக்கு எதிரான வளைந்து கொடுக்காப் போக்கை கடைப்பிடிக்குமாறு சில மேற்கு நாடுகள் செயலாளர் நாயகத் திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்று ஊர்ஜிதமற்ற வதந்திகள் நிலவுகின்றன. இந்த வதந்தி தொடர்பில் உண்மை எதுவும் உண்டா? பதில்: எனக்குத் தெரியாது. எவ்வாறாயினும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை தனித்து நின்று போராடி இல்லாதொழித்த ஒரு சிறிய அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கு தண்டனை வழங்க செயலாளர் நாயகத்திற்கு உரிமை கொடுக்க ஒரு நாடு உட் படுமானால் உண்மையில் அது புதுமையா னதாகும். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் அரசாங்கத்திற்கு தேர்தல்கள் மூலம் கிடைத்து வரும் வெற்றி, நாட்டு மக்களின் பூரண ஆதரவைப் பிரதிபலிக்கின்றது.

கேள்வி: ஐக்கிய நாடுகளுக்கும் இலங் கைக்குமான உறவுகள் சீர்கேடடைந் துள்ளதால் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நாயகம் லின்பெஸிகோவின் உத்தேசிக்கப் பட்டுள்ள இலங்கை விஜயத்திற்கு அரசாங் கம் அனுமதி வழங்குமா?இல்லையெனில் ஏன்? பதில்: ஐ.நா.வுடனான உறவு பாதிக்கப்பட் டுள்ளது என்பதை நான் நம்பமாட்டேன். முறைப்படியான பேச்சுவார்த்தைகள் அந்த அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இது போன்ற சிக்கலான விடயங்களால் நாம் சம்பந்தப்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. இறையாண்மை மிக்கதும் அமைப் பின் சமத்துவம் கொண்டதுமான இலங்கை தனது நியாயப்படியான பங்கினை தொடர்ந்து வகிக்கும். ஜனாதிபதியின் அழைப்பைத் தொடர்ந்து துணைச் செயலாளர் நாயகம் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்பதை நாம் அறிந்துள்ளோம். கேள்வி: சீனாவின் எதிர்ப்பினால் ஆரம் பத்தில் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உட்படுத்தும் நிகழ்ச்சியில் மேற்குலக சக்திகள் தோல்வியுற்றன. ஆனால் ஈரான் மீதான தடையை அமுல் செய்யும்படி பாதுகாப்புச் சபை மேற் கொண்ட மூன்று தீர்மானங்களை செயற் படுத்த மேற்படி நாடுகள் பீஜிங்கிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இலங்கையை விட பலம் வாய்ந்த அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ உறவுகளை சீனாவுடன் ஈரான் கொண்டுள்ளது. காலக்கிரமத்தில் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்டு சீனாவும் மாறும் ஒரு சூழ்நிலை தோன்றுமா என நீங்கள் ஊகிக்கிறீர்களா? இப்போது இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் பின்னர்?

பதில்: மேற்சொன்னது இந்த விவகாரத்திற்கு ஒத்துவராதது.

கேள்வி: இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஒரு நிலையில் உத்தேச நிபுணர்கள் குழு அமைப்பது தொடர்பில் செயலாளர் நாயகத்தை அணி சேரா அமைப்பு நாடுகள் முழு மனதாக குற்றம் சுமத்துவதாக அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. தேசிய ஐக்கியத்தையும் நல் லிணக்கத்தையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இலங்கையின் முயற்சிகளுக்கு நல்லதைச் செய்வதற்கு மாறாக தீங்கையே இது ஏற்படுத்தும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான காரியத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா?

பதில்: இலங்கை செயலாளர் நாயகத்தின் மீது எப்போதும் பெருமதிப்பு கொண்டுள்ளது. அமைப்பின் கடினமான பணியொன்றை அவர் மேற்கொண்டு சேவையாற்றுகின்றார் என்பதை யும் நன்கு உணர்ந்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஒரு சூழ்நிலையில் அரசியல் உணர்வுகளை தூண்டி விடாத வகையில் அவர் நடந்துகொள்வார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி: ஐக்கிய நாடுகளுக்கான இலங் கையின் மாற்று எதிர் நடவடிக்கை என்ன? குழு நியமன உத்தேசமா? அவ்வாறு அனும திக்கப்பட்டால் செயலாளர் நாயகத் தின் தீர்மானம் இது போன்ற நடவடிக்கையை எல்லா நாடுகளுக்கும் மேற்கொள்ள முன் மாதிரி யானதொன்றாக அமையுமா? பதில்: செயலாளர் நாயகத்தினதும் அவரது பேச்சாளரதும் விளக்கங்களுக்கு இலங்கை யில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் துரதிஷ்டமானது முற்றிலும் எதிர்மா றானது என்பது கோடிட்டுக் காட்டப்பட் டுள்ளது. மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஒருவரை நாம் கொண்டுள்ளோம். முன்னர் சம்பவிக்காத அங்கீகாரத்தை அவர் வகிக்கிறார். சகல கட்சிகளும் அரசியல் முக்கியத்து வத்தை உணர்ந்து தற்போதைய விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். இலங்கையில் உள்விவகாரத்தை வெளிநாட்டுத் தலையீடின்றி நாமே தீர்த்துக் கொள்ள வகை செய்ய வேண்டும். இது உலக அளவில் ஒரு முன் உதாரணமாகக் கொள்ளப்படக்கூடியதாக அமையும். மனித உரிமைகள் சபையின் முன்னிலையில் பொறுப்பான செயல் முறை குறித்து (இலங்கை) சட்ட மா அதிபரால் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’