கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இலங்கையின் ஒற்றை வான்வழிப் போக்குவரத்துப் பாதையாக இடம்பெறுகிறது. புலிகளினால் கொழும்பில் குழப்பமும் அமைதியின்மையும் தோன்றுவதற்கு முன்பு பெருமளவு மேற்கு கிழக்கு உல்லாசப் பயணிகள் கட்டுநாயக்கா ஊடாக வந்து போயினர். இதனால் இலங்கை பெரும் வருவாயை ஈட்டியது. உல்லாசப் பயணிகள் வருகை குறைந்தபோது வருவாயும் குன்றி இருந்தது.
புலிப் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளினால் இலங்கை அரசுக்குச் சொந்தமான எயர் லங்கா என்றும் சிறிலங்கன் எயார்லைன் என்றும் பெயரிடப்பட்ட பயணிகள் விமான சேவையும் பெரும் நிதி நெருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. உல்லாசப் பயணிகள் வருகைக் குறைவால் மாத்திரமல்லாமல் எயர் லங்கா விமானத்தில் பறப்பதில்லை என்ற புலித் தமிழர்களின் தீர்மானமும் அதன் வீழ்ச்சிக்கு சிறிது காரணமாக அமைகின்றது.
கட்டுநாயக்காவின் பயணிகள் ஏற்ற இறக்கப் புள்ளி விபரங்களின் படி இந்த நிலையத்தை மிகக் கூடுதலாகப் பயன்படுத்துபவர்களில் தமிழர்கள் முன்னணியில் இடம் வகிக்கின்றனர். பல சிரமங்களுக்கு மத்தியில் சில புலித் தமிழர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிற நாட்டு விமானங்களில் ஏறித் தமது பயணங்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் தமது விமான சேவையைப் பயன்படுத்துவதில்லை என்பதை இலங்கை அரசு நன்கு அறியும். சேவை என்று பார்க்கும் போது சிறிலங்கன் எயர்லைன் உலகின் மிகச் சிறந்த விமான சேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருந்தும் புலித் தமிழர்கள் வேறு விமான சேவைகளையே நாடுகிறார்கள். மலிவு விலைக்கு ரிக்கற் கொடுத்தால் தமிழன், விமானத்தில் இருக்கை இல்லை என்றாலும் நின்றாவது பிரயாணம் செய்வான்.
புலிகள் கட்டுநாயக்கா விமானப் படை நிலைகளைத் தாக்கிய போது பயணிகள் விமான நிலையம் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டனர் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அவதானமாக இருந்தனர். இந்த அக்கறை பயணிகள் மீதான அக்கறை என்று யாரும் நினைத்து விட வேண்டாம். அந்தக் காலப் பகுதியில் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான அபிப்பிராயம் நிலவி வந்தது. அந்த நேரம் பயணிகள் மீது தாக்குதல் நடந்தால் அதன் மூலம் தமக்கு மேலும் மேலும் பாதகமான நிலை தோன்றும் என அஞ்சிய புலிகள் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்தனர்.
புலிகளது வரலாற்றில், பலதடவைகள் புலிகள் மனம் போனபோக்கில் மக்கள் குடியிருப்புகள், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் நின்று இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தினர்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஐபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தேசிய புலனாய்வு அமைப்பு விமானநிலைய பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பில் தமிழ் இளைஞர்கள் சிலரும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் தேசியப் புலனாய்வு அமைப்புக்குத் தலையாட்டிகளாகச் செயற்படுகிறார்கள். இவர்களுக்கு இது ஒன்றும் புதிய வேலையல்ல. இந்திய அமைதிப்படை காலத்தில் செய்த பழக்கப்பட்ட வேலைதான். அந்தக் காலத்தில் அடைப்புக்களில் நின்று ஓட்டைகளால் பார்த்து தலையாட்டியது இந்த மாவீரர்கள் தான். மோப்ப நாய்கள் போல் செயற்பட்டு பணம் பறிப்பதற்குப் பொருத்தமான தமிழர்களைத் தேடிப் பிடிக்கின்றனர். இந்த வகை இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கருணா குழு, பிரபாகரன் குழு என இரட்டைக் குழுக்கள் அரசின் அடிவருடிகளாகவும் தமிழனைக் காட்டிக் கொடுப்பவர்களாகவும் செயற்படுகிறார்கள்.
பட்ட துன்பங்கள் போதும்! இனியாவது வெளியில் போய் சுகமாய் இருப்போம்! சொந்த பந்தங்களைச் சந்தோசப்படுத்துவோம் கணவரிடம் போய்ச்சேருவோம் என்றெல்லாம் பல கற்பனைகளோடு கட்டுநாயக்கா வந்தால் சோதனைகளை முடித்துக்கொண்டு சுமைகளை லிப்டில் போட்டுவிட்டு இமிக்கிரேசன் பதிவு செய்ததும் விமானத்தில் ஏறுவதுதான் பாக்கி என நினைத்துக் கொண்டு வலம் புறம் திரும்பினால் பாசக்கயிற்றோடு இயமன் தூதுவர்கள். இவர்களிடமிருந்து தப்பி வெளியேறினால் அவர்கள் மறுபிறப்புத்தான் என்று சொல்லும் அளவுக்கு கட்டுநாயக்கா கதை நீண்டு செல்கின்றது.
பயங்கர வாதத்தையே அடியோடு அழித்து விட்டதாக உலகிற்கு அம்பலப்படுத்திய இலங்கை அரசு உயிரோடு தப்பிய சில புலிகள் வெளிநாடு ஓடுவதாக கூறிக்கொண்டு ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கைது செய்தல், கசக்கிப்பிழிதல் என கைவரிசையைக் காட்டுகிறது. இதில் வெளிநாடுகளில் புலிக் கொடி பிடித்தவர்களும், புலிக்கெனச் சொல்லி பணம் பண்ணியவர்களும் பலர் மாட்டுப்பட்டுள்ளனர். வெளி வருவது ஓரிரு சம்பவங்கள் தான் மீதமெல்லாம் மூடி மறைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கானவர்கள் கட்டுநாயக்கா கண்ணாடி அறைக்குள் போய்வருகின்றார்கள்.
இலங்கையில் தொடர்ச்சியாக பல வருடங்களாக இடம்பெற்று வந்த புலிகளின் பயங்கரவாத செயல்களால் அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமாக அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதைப் பயன்படுத்தி கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளும் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பல தமிழர்கள் பாதிப்படையத் தொடங்கியுள்ளார்கள். இமிக்கிரேசன் முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறப்போகும் இடைவழியில் நடக்கும் சம்பவம் பல புலித் தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
தமிழர்களிடம் கடவுச்சீட்டை வேண்டி திருப்பி திருப்பி பார்த்த கையோடு அவரை சந்தேக நபராக்கி விடுவார்கள். தலை அல்லது கை காட்டும் திசையை பார்த்தால் கறுப்பு கண்ணாடி அறை தெரியும். அங்கு சென்றால் கடுமையான விசாரணை, பல வெறு இடங்களுக்கு தொடர்பு எடுத்து தகவல் கேட்பது போல் பாசாங்கு, அனைத்து பொருட்களும் பரிசோதனை என செயல்பாடு இருக்கும். சந்தேகப்படும்படியானவர்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு சிலர் தடுத்து வைக்கப்படுகிறார்கள்,
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் விசேடமாகக் கண்காணிக்கப் படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் என்றால் மிகமிக விசேட கவனிப்புகள் தான். சமீபத்தில் புலிக்கட்சி தொடங்கிய நாட்டுக்காரர்கள் என்பதால் சற்று ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் தமிழர்களின் போட்டுக்கொடுக்கும் குணம் இங்கும் நல்லாகவே வேலைசெய்கிறது. புலன் பெயர்ந்த தமிழர்கள் தமது அயலவர்கள் தாயகம் போவது அறிந்தால், அவர்களைப் பற்றி இலங்கை அரசுக்கு தகவல்கள் அனுப்பிவிடுகிறார்கள்.
இவர் நாடு கடந்த தமிழீழ குழுவை சேர்ந்தவர்.
இவர் வட்டுக்கோட்டை தீர்மான கோஷ்டியைச் சேர்ந்தவர்.
இவர் புலிப் பணத்தில் வியாபாரம் செய்கிறார்.
இவர் பேரில் புலிகள் சொத்து வாங்கியுள்ளார்கள்.
இவர் புலிப் பேப்பர் நடத்துகிறார்;.
இவர் புலி வானொலியில் வேலை செய்கிறார்.
இ;ப்படியான தகவல்கள் தமிழ் உறவுகளிடமிருந்து இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்குத் தாராளமாகக் கிடைத்து வருகிறது.
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு.
தமிழன் என்று கொல்லடா. தலையாட்டியாக நில்லடா.
(குசும்பன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’