கண்டியில் நபர் ஒருவரை படுகொலை செய்து, அவரது கரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பட்டப் பகலில் இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கண்டி பிரதான பொதுச் சந்தைக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த
இளைஞரை முதலில் படுகொலை செய்து பின்னர், அவரது கரங்களை கொலையாளிகள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞர் படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்., பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இதனை ஓர் பழிவாங்கல் சம்பவமாக கருதுவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’