வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

(2ம் இணைப்பு) சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழு நியமனம்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்காக புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குழுவின் தலைவராக கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் பணியாற்ற, தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றவுள்ளனர்..

இந்த நிலையில் குறித்த பரிந்துரைக்கு படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் கையொப்பம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது அதற்கு நீதிபதிகளாக இருந்தவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்த நிலையிலேயே புதிய நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொன்சேகாவுக்கு எதிராக, முதலாவது குற்றப்பத்திரிகையில் இராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில், ஆயுதக் கொள்வனவில் ஊழல் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதில் முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை கடந்த 16 ம் திகதி நடத்தப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி அது ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது விசாரணை 17 ம் திகதி நடத்தப்பட்டபோது விசாரணை திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’