13வது அரசியல் சீர்திருத்தத்துக்கு அது அமுல்படுத்தப்பட்டபோது ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் அதனை மீண்டும் கோருவது அர்த்தமற்ற செயல் என வரதராஜ பெருமாள் கூறுகிறார்.
மக்களுக்கு எந்தவகையான அரசியல் தீர்வு அவசியம் என்பதை தற்போதைய கள நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களும் கலந்து பேசியே இந்தத் தீர்வுத் திட்டத்தை எட்ட வேண்டும் என அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னர் ஒருங்கிணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து, பின்னர் நீண்டகாலமாக இந்தியாவில் வசித்து வந்தவரான வரதராஜ பெருமாள் தற்போது இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’