வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

உலகின் சிரேஸ்ட தலைவர்களாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா, ஜவர்லால் நேரு போன்ற தலைவர்களைப் போன்று ஜெனரல் சரத் பொன்சேகாவும் அசாதாரணமான சூழ்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை தலைமைகத்தில் தடுத்து வை


உலகின் சிரேஸ்ட தலைவர்களாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா, ஜவர்லால் நேரு போன்ற தலைவர்களைப் போன்று ஜெனரல் சரத் பொன்சேகாவும் அசாதாரணமான சூழ்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்படை தலைமைகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கையொப்பமிட்ட வேட்பு மனுவை ஜனயாக தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத்திடம் ஒப்படைத்த போது அனோமா பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஓர் அசாதாரண சூழ்நிலை எனவும் மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டலே மற்றும் நேரு போன்ற தலைவர்களின் வரிசையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் இணைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் தேர்தலில் போட்டியிடக் கூடிய அஞ்சா நெஞ்சம் கொண்டவர் தனது கணவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டாலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக பொன்சேகா தம்மிடம் குறிப்பிட்டதாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’