வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

இலங்கை நிலைமை குறித்து ஐரோப்பி ஒன்றியம் கவலை


இலங்கையில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சட்ட ஆட்சி நிலவுவதையும் மற்றும் வேட்பாளர்களினதும் பிரசாரத்தில் ஈடுபட்டோரினதும் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஒன்றியம் இலங்கை அதிகாரிகளிடம் கோரியுள்ளது என்று ஒன்றியத்தின் பேச்சாளரும் துணைத் தலைவருமான கதறீன் அல்ஸ்ரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த கால பிரிவினைகளை மறப்பதற்கு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்தையும் நாட்டிலுள்ள சகல சமூகங்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் இன்றி நீண்டகால பாதுகாப்பையோ சுபீட்சத்தையோ ஏற்படுத்த முடியாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’