வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது : கெஹலிய


வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையை இன்னமும் காலனித்துவ நாடாக கருதி, பிரித்தானியா செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட் இலங்கை மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய, நோர்வே உள்ளிட்ட சில நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’