
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி முகாம்களில்ல் தங்கவைக்கப்பட்டிருந்த தேவன்பிட்டி மக்கள் மீள்குடியேற்றம் செய்வதற்காக நேற்றும், நேற்று முன் தினமும் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும்,புனித சவேரியார் தேவாலயத்துக்கும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
235 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரினதும் வீடுகள் சேதமடைந்த நிலையில் தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்காக பலகைகள் வழங்கப்பட்டுள்ள போதும் தகரம்,இறப்பர்சீற் போன்றவை வழங்கப்படாமையினால் கூடாரங்களை அமைக்க முடியாதுள்ளதாக இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
குடிநீரை பெற்றுக்கொள்வதிலும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அம்மக்களுடன் உரையாடியதோடு இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’