
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரே அணியில் ஒன்றிணைந்து போட்டியிடும் இணக்கப்பாட்டுக்காக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
"பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இப்போது அகில இலங்கை ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பெரும்பாலும் புது முகங்கள் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடலாமென்றும்" என்றும் கூறினார். அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ரஷ்ய முறையில் அரசுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செயற்பட திட்டமிட்டிருந்ததாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது சரகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்தபின்னர் சகல அரச திணைக்களங்களிலும் 'பொல்ஷேவிக் குழு'க்களை நியமித்து பணிகளை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’