
ரணில் விக்ரமசிங்க சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் ஜனாதிபதித் தேர்தலில் காணப்பட்ட கூட்டமைப்பு முடிவடைந்து தற்சமயம் விருப்புத்தெரிவு என்ற கௌரவப் பிரச்சினை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் ரணில் விக்ரமசிங்கவும் தேசிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக் கோப்பை சின்னத்தில் சரத் பொன்சேகாவும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் மேற்படி முக்கிய பிரமுகர்கள் இருவரும் வெவ்வேறு கட்சிகளில் கொழும்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிடுவதனால் விருப்பு வாக்கு தொடர்பில் கௌரவப் பிரச்சினை எழத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இருவரில் யார் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பான கௌரவப் பிரச்சினை இதன் மூலம் ஏற்படக் கூடுமென கொழும்பு ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’