கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் சுமார் 300,000 இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர்.
இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக கடந்த 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்பினர் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட போது, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், அதற்கான சமிக்ஞைகள் எவையும் இதுவரையில் தெரியவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’