வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 பிப்ரவரி, 2010

முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட குழுவினரால் ஜெனரல் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் : திவயின


முப் படைகளையும் சேர்ந்த விசேட குழுவினரால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஐவர் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி ஒருவரையோ அல்லது இராணுவ உயர் அதிகாரி ஒருவரையோ ஜெனரல் பொன்சேகா தெரிவு செய்து அவரின் ஊடாக தனது வாதங்களை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க உள்ளதாக ஜெனரல் பொன்சேகா சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த செவ்வி இராணுவ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’