
கடந்த 4 ஆம் திகதியன்று, லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தில் பிரவேசித்து இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயன்றமை தொடர்பில் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த 4 ஆம் திகதி, இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குழு ஒன்று, இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயற்சித்துள்ளது. எனினும் அதனை லண்டன் பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே வி பி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என ரோஹித்த போகல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’