வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகளை ஏற்க முடியாது : சிதம்பரம்


மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கு நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தங்களுக்கு எதிரான நடவடிக்கையை 72 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை நிறுத்துவதாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையை கைவிடுவதாகவும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் மாவோயிஸ்ட் தலைவர்கள் தெளிவாக அறிவித்த பின்னரே, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்துத் தான் உரிய பதிலை அளிக்க முடியும் என்றும் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’