
பதுளை மாவட்டம் தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பால முருகன் விக்கிரகம் உட்பட பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் ஒரு அடி 6 அங்குலம் நீளமானதும் 5 கிலோ எடையுடனான நூறு வருடங்கள் பழைமையான பால முருகன் வெள்ளி விக்கிரகம் முத்துமாரி அம்மனுக்கு சாத்தும் கஜபாதங்கள் தங்கத்திலான திரிசூலம் மற்றும் திலகங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் கந்தசாமி பெரியசாமி குருக்கள் தெரிவித்துள்ளார். இக்கொள்ளை தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இக்கொள்ளை தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கோ அல்லது தேவஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’