வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 பிப்ரவரி, 2010

வசதிகளற்ற தனியறையில் எனது கணவர் : அனோமா பொன்சேகா


எந்த வசதிகளும் இல்லாமல் தனியறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எனது கணவரின் பாதுகாப்புக்காக என்னையும் கைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கண்ணீருடன் தெரிவித்தார்.

இராணுவ சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பார்ப்பதற்கு அவரது மனைவிக்கு அரசாங்கம் அனுமதியளித்தது.

இந்நிலையில், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“எனது கணவரை பார்க்கச் சென்றபோது நான் மிகுந்த கவலையடைந்தேன். வெளியுலகம் தெரியாதவாறு ஓர் அறைக்குள் இருந்தார். இப்படியானதொரு தண்டனை கிடைப்பதற்கு எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை.

அவர் தவறு செய்ததாக குறிப்பிடுவார்களேயானால் அதற்கு நானும் உடந்தை என என்னையும் கைது செய்து அழைத்துச் செல்ல வேண்டும். இராணுவத்தின் வெற்றி வீரர் ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள உரிய பரிசு இதுதானா?

எனது கணவர் இராணுவத்தில் இருக்கும் போது எந்தவொரு காரணங்களுக்காகவும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. நாட்டின் நலன்கருதி அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக இவ்வாறு நடத்தப்படுவது அநீதியானது” என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’