வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தமிழீழத்திற்கான எதிர்காலம் இல்லை: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு


தமிழீழத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், புலம்பெயர் தமிழ் சமூகம் அதில் இருந்து வெளிவரவேண்டும் எனவும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் தோற்கடிக்கப்பட்ட கொள்கைகளில் இருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வெளியே வரவேண்டும். சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டத்தை புலம்பெயர் தமிழ் மக்கள் நேர்மையாகவும், ஜனநாயக வழிகளிலும் மேற்கொள்ள முனைந்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் வன்முறையான போக்குகளை அவர்கள் எதிர்க்க வேண்டும் என அதன் ஆசிய பிராந்திய திட்டப் பணிப்பாளர் றொபேட் ரெம்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை சிறீலங்கா அரசு முன்வைக்க வேண்டும். அரசியல் நடைமுறைகளும், செயற்திட்டங்களும் அங்கு உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப்போரை விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதில் இலங்கை அரசு தொடர்ந்து தோல்வி கண்டால் அவர்கள் தமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்முறையான வழிகளை நாடலாம். அதற்கு உதவியாக புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் அவர்கள் நாடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’