வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் : திஸ்ஸ அத்தநாயக்க


ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதாக ஐக்கியத் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க அங்கு மேலும் பேசுகையில்,

ஐனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தியது அரசாங்கம். இன்று ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’