வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

உலகில் மிக குள்ளமான நேபாள இளைஞர்;18 வயதில் 51 செ.மீ.உயரம்!


உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை கஜேந்திரா தபா மகர் (வயது 18) என்பவர் பெற்றுள்ளார். 51 செ.மீற்றரே உயரமுள்ள இவரது பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேபாளத்தைச் சேர்ந்தவர் ரூப் பகதூர் தபா மகர். இவரது மகன் கஜேந்திரா தபா மகர் (வயது 18). இவர் 51 செ.மீட்டர் உயரமே உள்ளார். இவரே நேபாள நாட்டின் குள்ள மனிதராக உள்ளார்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த பிங்கிங் என்பவர் உலகிலேயே குள்ளமான மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது உயரம் 73 செ.மீட்டர். ஆனால் கஜேந்திரா இவரை விட மிக குறைவாக 51 செ.மீட்டர் உயரமே இருக்கிறார்.

எனவே, உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை இவருக்கு வழங்க வேண்டும் என லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.

எனவே, இவர் தந்தை ரூப் பகதூருடன் இத்தாலி செல்கிறார். அங்கு டெலிவிஷனில் நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுகிறார். இத்தகவலை அவரது தந்தை ரூப் பகதூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கஜேந்திரா கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தார். 8 வயதில்தான் இவர் நடக்கவே தொடங்கினார். 11 வயதில் இருந்தே அவரது உடல் வளர்ச்சி தடைபட்டது. தற்போது இவர் 51 செ.மீட்டர் உயரமே உள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’