-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 29 ஜனவரி, 2010
சரத் பொன்சேகா அரசியல் புகலிடம் கோரவில்லை: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளாராம் சரத் பொன்சேகா. ஆனால் இதுவரை அப்படி ஒரு கோரிக்கை பொன்சேகாவிடமிருந்து வரவில்லை என்று அவுஸ்திரேலியா மறுத்துள்ளது.
பொன்சேகாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அவர் அஞ்சுகிறார். ராஜபக்ச சகோதரர்கள் கொலைத் திட்ட பழியை சுமத்தி சிறையில் அடைத்துக் கொன்று விடுவார்கள் என்ற அச்சமும் அவருக்கு வந்து விட்டது.
இதனால் நாட்டை விட்டு ஓடும் எண்ணத்துக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்து இந்தியாவிடம் பாதுகாப்பு கேட்டு அணுகப் போவதாக பொன்சேகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனோ கணேசன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில வெளிநாடுகளிடம் பொன்சேகா புகலிடம் கோரி அணுகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதுவரை அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது தொடர்பாக முறைப்படி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை.
இருப்பினும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று பொன்சேகா சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவது அவருக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார் ஸ்மித்.
முன்னதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகா, தற்காலிக புகலிடம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்களுடன் பேசியுள்ளேன். அவுஸ்திரேலிய தூதருடனும் பேசவுள்ளேன்.
ஆனால் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’