
சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
ஹெக்நேலியகொட ராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போதே காணமால் போயியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9.30 முதல் அவரது கையடக்க தொலைபேசி செயலிழந்துள்ளது.
நேற்றிரவு 9.30 மணிக்கு முன்னர், ஹெக்நேலியகொடவின் தொலைபேசியில அவரது நண்பர் ஒருவர் அழைப்பை எடுத்த போதுஇ போவது கொஸ்வத்தை பிரதேசத்திற்கு அல்ல எனக் கூறுவதை கேட்க முடிந்ததுள்ளது.
ஹெக்நேலியகொட சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துடன் லங்காஈநியூஸ் இணையத்தளத்தில் சுயாதீன ஊடகவியலாளராக அரசியல் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்துடன் தேசிய புத்திஜீவிகள் சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’