வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஜனவரி, 2010

இலங்கை மாணவியின் மீது மலேசியாவில் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது


இலங்கையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மலேசியாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு அவரின் உடமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொட்டிங்கெம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த மாணவி தனது வாடகை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத ஒருவர் அவரின் தலையில் தாக்கி சுயநினைவை இழந்தப் பின்னர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் அவரின் உடமைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி சுயநினைவு திரும்பிப்பார்த்த போது குறித்த நபர் தப்பிச் சென்று விட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் கொழும்பின் தமிழ் மாணவர் ஒருவர் மலேசியாவில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’