
கையடக்கத் தொலைபேசிப் பாவனை அல்சைமர் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக கையடக்கத் தொலைபேசி பாவனையின் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடுமென்பதே பரவலான கருத்தாக அமைந்துள்ளது.
எனினும், முதல் தடவையாக கையடக்கத் தொலைபேசி 'அல்சைமர்' என்ற ஞாபகமறதி நோயைக் கட்டுப்படுத்த உதவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையின் மூலம் இந்த உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி அலைகளினால் மனித மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்தன.
எனினும், கையடக்கத் தொலைபேசி அலைகளினால் அல்சைமர் நோயினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தடுக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட கால ஆய்வின் பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புளொரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’