வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 ஜனவரி, 2010

யுத்தத்தின் மூலம் நிறைவேற்ற முடியாதவற்றை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி


யுத்தத்தின் மூலம் நிறைவேற்ற முடியாதவற்றை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக அமெரிக்காவின் பௌத்த விஹாரையின் பீடாதிபதி வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச புலி வலையமைப்பின் அழுத்தம் காரணமாக இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கை இணைத்தல், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் உள்ளிட்ட முக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து கோள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் கடும் போக்குடைய இனவாத கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தின் மூலம் கிடைக்கப் பெறாத வெற்றியை, அரசியல் ரீதியாக அடைவதற்கு முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கீரின் கார்ட் உரிமையுடைய நபர் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’