தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டம் இட்டபடி 18.01.2010 அன்றில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆh இலங்கை அகதிகள் அனைவரும் எந்த விதமான நீர் ஆகாரம் எதுவும் இன்றி இரண்டாவது நாளாக (தாய்லாந்து நேரப்படி) தொடர்ந்தும்உண்ணாவிரதப் போராட்டத்தில் இடுபட்டுள்ளனர்!!தாய்லாந்து பாங்கோக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவு செய்து தற்போது 3 வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ய+.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகளினாள் ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட ஆறு கோரிக்கைகளுக்கு ஜ.நா வின் பெது செயளாளர் திரு. பாக்கீமூன் அவர்களிடம் இருந்தே? யூ.என்.எச்.சீ.ஆர் தலமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவில் இருந்தே? தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் பிராந்திய அலுவலகத்தில் இருந்தே? ஏந்தவிதமான மனித உரிமை மனித நேய அமைப்புக்ககளே இது வரையில் இவர்களை சென்று பார்வையிடாத காரணத்தினால் இவர்களுடைய கடுமையான உண்ணாவிரதப் போரட்டம் நீர் ஆகாரம் எதுவும் அற்ற நிலையில் இரண்டாவது நாளாக (தாய்லாந்து நேரப்படி) தொடர்கின்றது.இவர்களுடன் பாக்கிஸ்தான் நேப்பால் யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகளும் இவ் உண்ணாவிரதத்தில் இனைந்து கொண்டுள்ளனர் என்பது கூறிப்பிடத்தக்கதுஇது பற்றிய தகவல்கள் தொடரும்
-



















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’