வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நாம் அகதிகள்: ஏன் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறோம்? மெராக் தமிழ் அகதிகள் ஆதங்கம்


இலங்கை நாட்டில் அப்பாவிகளாகிய நாம் எந்தவொரு குற்றங்களையும் செய்யாமல் சந்தேகத்தின் பெயரில் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம். பல விபரிக்கமுடியாத கொடுமைகளை இலங்கை அரசு எம்மீது திணித்து துன்புறுத்தியது.
இன்னும் எமது உறவுகள் இலங்கை அரசின் சிறைகளிலும் வதைமுகாம்களிலும் தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எமது எதிர்காலங்களை பற்றி சிந்திக்காத இலங்கை அரசு அப்பாவித் தமிழ் உறவுகளின் வாழ்வை சீரழிக்கிறது. அந்த துன்பகரமான வாழ்விலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க வந்த எம்மை ஏன் இவ்வுலகம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி பார்க்க நினைக்கின்றது என இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் ஆதங்கம் வெளியிட்டிருக்கிறார்கள்.

மூன்று மாத காலமாக நாம் மிகச்சிறிய படகில் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு அவுஸ்திரேலிய அரசின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். ஏற்கனவே எமது உறவொன்றை நாம் இழந்து விட்டோம். தோல் நோய்கள், வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற பல்வேறுபட்ட வியாதிகளாளும் பீடிக்கப்பட்டிருக்கிறோம். மனோநிலை பாதிக்கப்பட்டு பலர் விரக்தி நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். எமது குழந்தைகளின் நலிவுற்ற நிலையை பார்த்து பொறுக்க முடியாதவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சில காலத்திற்கு இந்நிலை தொடருமாக இருந்தால் நாம் எப்பேற்பட்ட அபாயநிலைக்கு தள்ளப்படுவோமோ என அச்சமடைகிறோம். எமது இந்த பரிதாப நிலையை கருத்திற் கொண்டு அவுஸ்திரேலிய அரசு எமக்கான தீர்வை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டுமென அன்பாக கேட்டுக்கொள்கிறோம் என மெராக் தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’