வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்'' என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’