இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற சாபாநாயகர் லொக்கு பண்டார தமிழ்நாடு மயிலாடுதுறை அருகே காரொன்றில் பயணித்தசமயம் செருப்பு வீச்சு இடம்பெற்றுள்ளது.
ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செருப்பு வீசிப் போராட்டம் நடத்தியதால்அங்கே பரபரப்பு ஏற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கும்பகோணம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரா நேற்று செ3ன்றிருந்தார். அவருடன் மனைவி, மகன் உள்ளிட்டோரும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோவிலை தரிசனம் செய்துவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.கவினர் திரண்டு வந்தனர்.
லொக்கு பண்டாராவின் கார் வந்ததும் கார் மீது செருப்பை வீசி எறிந்தனர். இதில் பண்டாராவின் மகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இலங்கை சபாநாயகர் பண்டாராவும், அவரது மனைவியும் காரை விட்டு இறங்கவில்லை.
விரைந்து வந்த பொலிஸார் இலங்கை சபாநாயகரின் கார் அங்கிருந்து பாதுகாப்புடன் செல்ல உதவினர். அதன் பின்னர் செருப்பு வீச்சு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’