-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 4 ஜனவரி, 2010
இணைந்த மாகாணமாக இருப்பதற்கான சட்டவலுவின்மையே வடக்கும் கிழக்கும் பிரிவதற்கு காரணம் - முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
தேவையான சட்டவலுவைக் கொண்டிராத நிலையில் வடக்கும் கிழக்கும் மாகாணமாக இணைந்திருந்தமை காரணமாகவே அதனை பிரிக்க வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியிலேயே பிரதம நீதியரசர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதி எவரும் எடுத்திருக்கவில்லை என்றும் இணைந்த மாகாண சபை ஜனாதிபதியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதை அடுத்து அதற்கெதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக இம்மாகாண சபையின் அடிப்படைத்தன்மை யாவற்றையும் மீள்பரிசீலனைக்குட்படுத்த வேண்டியிருந்ததாகவும் நீதியரசர் அப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எவராவது இவ்விரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்க எண்ணம் கொண்டிருந்தால் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான தருணம் இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் நீதியரசர் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் ஆயுதக்களைவோ யுத்த நிறுத்தமோ இடம்பெற்றிராத சூழலில் 13வது திருத்தமானது நிறைவேற்றப்படாது இருந்து வந்ததாகவும் அப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’