
அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 போ் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.
புனருத்தாபன நிலையங்களில் விடுதலைப் புலிகளின் மனநிலை விருத்தி செய்யும் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’