வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஜனவரி, 2010

தபால் மூல வாக்களிப்புக்கான 4 லட்சத்து 58154 விண்ணப்பங்களில் 57 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - இன்றும் நாளையும் 15 ஆயிரம் நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடு


இன்றும் (12) நாளையும் நடைபெறவுள்ள தபால் மூல ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்காக மொத்தம் 4 இலட்சத்து 58154 பேர் விண்ணப்பித்துள்ள அதேசமயம் இவற்றில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அட்டைகளை பெறமுடியாதுள்ளவர்களை போனோர் எதிர் வரும் 18ம் திகதிக்குப் பின்னர் உரிய ஆவணங்களுடன் அருகேயுள்ள தபால் நிலையத்துக்கு சென்று உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தபால் மூல வாக்களிப்புக்காக இரு நாட்களை அறிவித்துள்ள போதும் எதிர்வரும் 26ம் திகதி வரை தபால் மூல வாக்காளர் தமது வாக்கை அளிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக 15 ஆயிரம் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வாக்கு அட்டைகளின் சீரான விநியோகத்திற்காக கடந்த விடுமுறை தினத்திலும் தபால் திணைக்களம் விநியோகப் பணிகளை மேற்கொண்டதாக திணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் பணிகளை கண்காணிக்கவென இம்முறை பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் எனபவற்றுக்கு மாத்திரமே அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’