வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

புலிகளின் சர்வதேச சொத்துக்களை முடக்க ஐரோப்பாவில் இராஜதந்திர முயற்சி!


விடுதலைப்பலிகளின் சர்வதேச சொத்துக்களை முடக்கும் வகையில் ஐரோப்பாவில் இராஜதந்திர முயற்சிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன ஐரோப்பாவின் சகல நாடுகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐரோப்பா முழுவதிலும் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும் இதுதொடர்பான மதிப்பீடுகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சொத்துக்களை எவ்வாறு அரசுடமையாக்குவது என்பது குறித்த ஆலோசனைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. புலிகளி;ன் சொத்துக்களை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்வதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’