
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக உணர்ச்சி வசப்பட்டு காரசாரமாக வாதிட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மரமணமடைந்துள்ளார். இச்சம்பவம
மாத்தறைப்பகுதியில் கம்புறுக்கமுவ எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 4 பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடைய இந்த மனிதர் கிராமத்து தேநீர் கடையொன்றுக்கு சென்றிருந்தார்.
உறவினர் ஒருவருடன் அங்கு சென்றிருந்த அவர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக காரசாரமாக வாதிட்டுள்ளார். அச் சமயம் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்துள்ளார். மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் சம்பவித்திருப்பதாக கூறியுள்ளதாக அததெரண இணையத்தளம் தெரிவித்தது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’