2009 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று இரவு வழமைக்கு மாறான இரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல பூரணைதினம் தென்படுவதே இதற்கான காரணமாகும். டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, இந்த மாதத்தின் இரண்டாவது பூரணைத்தினம் வந்துள்ளது.
இந்த நிலையில் இதனை வானிலையாளர்கள், நீலப்பூரணை என அழைக்கின்றனர். இன்று நள்ளிரவுக்கு பின்னர்,புதிய வருடம் பிறந்த பின்னர் பகுதியளவான சந்திரக்கிரகணத்தை பார்க்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக,வருடத்திற்கு 12 பூரணை தினங்கள் வருகின்றன.13ஆவது பூரணைத்தினம் அபூர்வமாகவே வருகின்றது. இந்த மாதத்தின் முதலாவது பூரணைத்தினம் கடந்த 2 ஆம் திகதி வந்தது.
ஒரு பூரணைத்தினம், இருபத்தொன்பதரை நாளில் வரும் போது அதன் மேலதிக நாட்கள், மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூரணைத்தினத்திற்கு வழி வகுக்கிறது.
நீல பூரணைத்தினம் 3 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் போது, இரண்டு நீல பூரணைத்தினங்கள் 18 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. கடைசியாக 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீலப்பூரணைத்தினம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் அடுத்த புதுவருட நீலப்பூரணைத்தினம் 2028 ஆம் ஆண்டு நிகழவுள்ளதாக வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’