வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 டிசம்பர், 2009

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் இன்றையதினம் ஏழாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமையில்!


வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் இன்றையதினம் ஏழாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமையில்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் இன்றைய தினத்தில் (17) பாதுகாப்பு தேவையின் நிமித்தம் 7000க்கும் அதிகமான பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஐ.எம். கருணா ரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகம் அமைந்துள்ள பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் இப் பகுதியூடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும்; பாதசாரிகளும் சோதனைக்குட்படுத்தப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று காலை 9 மணி முதல் ஆயுர் வேதச்சந்தி மாமாங்கச் சந்தி ஹொறண சந்தி நாவல கொஸ்வத்த சந்தியூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு - பத்தர முல்லை வீதியில் பயணிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதி நாரஹென்பிட்டி நாவல வீதிகளை மாற்று வீதிகளாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’