வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 டிசம்பர், 2009

முன்னைநாள் சிறுவர் போராளிகளான புலிகள் இன்றையதினம் இடம்பெறும் ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!


இராணுவத்திடம் சரணடைந்த முன்னைநாள் புலிகளான சிறுவர் போராளிகள் 432 பேர் இன்று நடைபெறவுள்ள ஜி.சீ.ஈ.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களுக்காக மூன்று பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திலுள்ள இடம் பெயர்ந்தவர்களுக்காக 46 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் 4 ஆயிரத்து 432 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 736 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் ஜி.சீ.ஈ. சாதாரண தரப்பரீட்சை நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் ஜெயபுர மகாவித்தியாலயத்திலும், கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இங்கு 250 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 380 மாணவர்கள் இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென மல்லாவி மத்திய மகா வித்தியாலயம், பாலி நகர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’