
பெண்கள் தொடர்பான ஆபாசக் காட்சிகளை இணையத்தில் சேர்க்கும் 60க்கும் அதிகமான குழுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை 15 பேர் இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறிப்பிட்டது. இவர்கல் பெண்களை ஏமாற்றி, கையடக்கத் தொலைபேசி மூலம் அவர்கள் சம்பந்தமான ஆபாசக் காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றைக் கனணி மூலம் தொகுத்து, இணையத்தில் ஏற்றுவது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இத்தகைய ஆபாசக் காட்சிகளைக் கையடக்கத் தொலைபேசியூடாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பல்வேறு நபர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் செயற்படுவதாகத் தெரியவந்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பான அதிகளவான தகவல்கள் கொழும்புப் பிரதேசத்திருந்தும் ஓரளவு தகவல்கள் காலி, கண்டி,வஸ்கமுவ பகுதிகளிலிருந்தும் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பாடசாலை செல்லும் வயதிலுள்ள பெண் பிள்ளைகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டப்படுவதாகவும் எனவே இந்த வயதிலுள்ள பெண்பிள்ளைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’